ஜெனீவா : அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நிலவி வந்த வர்த்தக போர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளும் பரஸ்பரம் வரியை குறைக்க ஒப்புக் கொண்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில் அமெரிக்கா மற்றும் சீன நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளும் பரஸ்பரன் வரியை 115% குறைக்க ஒப்புக் கொள்வதாக அறிவித்துள்ளன. அதன்படி, சீனப் பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 145% இறக்குமதி வரியை 30%ஆக குறைக்க ஒப்புக் கொண்டுள்ளது.
அதே போல் அமெரிக்க பொருள்கள் மீது சீனா விதித்துள்ள 125% இறக்குமதி வரியை 10%ஆக குறைக்க ஒப்புக் கொண்டுள்ளது. இறக்குமதி வரிக் குறைப்பு தற்காலிகமாக 90 நாள்களுக்கு அமலில் இருக்கும் என்றும் வரிக் குறைப்பு மே 14ம் தேதியில் இருந்து அமலுக்கு வர உள்ளதாகவும் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் தகவல் அளித்துள்ளார். பொருளாதாரம், வர்த்தக உறவு குறித்த கருத்து பரிமாற்றங்களை தொடர புதிய அமைப்பை உருவாக்கவும் முடிவு எட்டப்பட்டுள்ளது. அமெரிக்க, சீனா இடையேயான வர்த்தகப் போர் முடிவுக்கு வந்ததால் உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.
The post முடிவுக்கு வந்த வர்த்தகப் போர் : அமெரிக்கா-சீனா இறக்குமதி வரியை 115% குறைக்க ஒப்புக் கொண்டுள்ளதாக அறிவிப்பு!! appeared first on Dinakaran.