சென்னை: ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு அதிரடியாக ரூ.2,360 குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஜெட் வேகத்தில் தங்கம் விலை ஏற தொடங்கியது. அவ்வப்போது விலை சற்று குறைந்தாலும் பெரும்பாலான நாட்களில் அதிகரித்தே வந்தது. இந்தாண்டின் முதள் நாளில் ஒரு பவுன் தங்கம் ரூ.57,200 ஆக இருந்தது. ஆனால் பிப்ரவரி 1ம் தேதி ரூ.62 ஆயிரத்தை தாண்டியது.
அதன்பிறகு ஏப்ரல் மாதத்தில் ஒரு பவுன் ரூ.68,080 ஆக உயர்ந்தது. மே 1ம் தேதி ஒரு பவுன் ரூ.70,200 ஆக இருந்தது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் தங்கம் விலையானது புதிய உச்சங்களை தொட்டு நகை பிரியர்களையும் இல்லத்தரசிகளையும் கதிகலங்க வைத்தது. அதாவது, ஏப்ரல் 22ம் தேதி சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,200 அதிகரித்தது. அதன் பின்னர் சற்று குறைந்தது. இப்படியாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதும் சில நாட்களில் குறைவதும் என நகை பிரியர்களை திணறடித்து வருகிறது.
குறிப்பாக, இந்தியா-பாகிஸ்தான் போர் தொடக்கத்தின் போது தங்கம் விலை மளமளென ஏறி ஷாக் கொடுத்தது. அதாவது கடந்த 7ம்தேதி ஒரே நாளில் 2 முறை அதிகரித்து ‘ஷாக்’ கொடுத்தது. அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.9,100க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால், சென்னையில் இன்று தங்கம் விலை காலை பவுனுக்கு ரூ.1,320 அதிரடியாக குறைந்துள்ளது. மேலும் மாலையும் சவரன் ரூ. 1,040 குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில், சென்னையில் இன்று கிராமுக்கு ரூ.130 அதிரடியாக குறைந்து, ரூ.8,750-க்கும், பவுனுக்கு ரூ.2,360 குறைந்து, ரூ.70,000க்கும் விற்பனையாகிறது. ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,360 குறைந்ததால் நகை வாங்க திட்டமிட்டவர்கள் தங்களுக்கு தேவையான நகைகளை வாங்கினர். எனவே இந்த நகை குறைவு நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை தந்துள்ளது.
The post முடிவுக்கு வந்த இந்தியா – பாகிஸ்தான் சண்டை : ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு அதிரடியாக ரூ.2,360 குறைந்து ரூ.70,000 விற்பனை!! appeared first on Dinakaran.