“முக்கிய எதிர்க்கட்சி போட்டியிடாததால்...” - நாதக வாக்குகள் குறித்து திமுக வேட்பாளர் சந்திரகுமார் கருத்து

3 hours ago 3

ஈரோடு: “இந்த தேர்தல் முடிவுகள் தான் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில், முக்கிய எதிர்க்கட்சி போட்டியிடவில்லை. எனவே, திமுகவுக்கு எதிரான வாக்குகள் நாதகவுக்கு கிடைத்துள்ளன” என்று ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இந்த வெற்றிக்கு காரணம், தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து கூறிவருவது போல, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும்தான். இந்த தேர்தல் முடிவுகள் தான் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும்.

Read Entire Article