முகுந்தனுடன் ராமதாஸ் ஆலோசனை

2 hours ago 3

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில், வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

அதேவேளை, கடந்த 16-ம் தேதி முதல், டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளைத் தொடர்ந்து சந்தித்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்டு வருகிறார்.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் அவரது மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் சந்தித்து பேசியுள்ளார். பா.ம.க. வின் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டு பின்னர் ராஜினாமா செய்த பிறகு தற்போதுதான் முகுந்தன், ராமதாசை முதன்முறையாக சந்தித்து பேசினார். முன்னதாக, நேற்று செய்தியாளர்களின் சந்திப்பின்போது முகுந்தன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, முகுந்தன் விவகாரம் முடிந்து போன விஷயம். இனி நடக்கப்போவதை குறித்து பேசுங்கள் என்று ராமதாஸ் கூறியிருந்த நிலையில், இன்று இருவரின் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

 

Read Entire Article