
கோவை,
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர், கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சேலம் அணியின் கேப்டன் அபிஷேக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மதுரை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.