நன்றி குங்குமம் தோழி
பிரகாசமான முகத்தைப் பெற பல பெண்கள் விரும்புகின்றனர். நிலா போல் தங்களின் முகமும் ஜொலிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதற்கு சில எளிய வழிகளை கடைபிடிக்கலாம்.
*நாட்டுக் கற்றாைழயின் ஜெல்லி பகுதியுடன் கஸ்தூரி மஞ்சள், பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றை சேர்த்து குழைத்து அதை முகம், கழுத்துப் பகுதிகளில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாகும்.
*அதிமதுர சக்கையுடன் சிறிதளவு குங்குமப் பூ பால் விட்டு நன்றாக அரைத்த கலவையை முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால், முகத்தில் உள்ள கருமை நிறம் மாறி பளபளப்பு கிடைக்கும்.
*பப்பாளி, வாழைப்பழம் இரண்டையும் சம அளவு எடுத்து, தேன் கலந்து பேஸ்ட் பதத்திற்கு பிசைந்து இதை சருமத்தில் பூசி சில நிமிடங்கள் கழித்து கழுவ ஃப்ரஷ் லுக் கிடைக்கும்.
*கோதுமை மாவுடன் பாலாடை, பாதாம் பருப்பு இவற்றை நன்றாக நீர் விட்டு அரைத்து இரண்டு துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து குழைத்து இதை முகத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவுடன் இருக்கும்.
*ஆப்பிள் பேஸ்டை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பு தன்மை அடையும். ஆப்பிள் நீரை அரை டம்ளர் குளிக்கும் நீருடன் கலந்து குளித்தால் சருமம்
மென்மையாகும்.
*அவரை இலை சாற்றுடன் அன்னாசிப் பழ சாற்றை கலந்து முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து முகம் கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.
தொகுப்பு: வாசுகி, சென்னை.
The post முகம் பொலிவு பெற வழிகள்..! appeared first on Dinakaran.