25 மொழிகளை சரளமாக பேசும்; ராமேஸ்வரம் பள்ளியில்ஏஐ ஆசிரியை அறிமுகம்: மாணவர்களுக்கு பதிலளித்து அசத்தல்

1 week ago 2

ராமேஸ்வரம்: `ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ் (ஏஐ)’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு உலகளவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து வருகிறது. கணினி தொழில்நுட்பத்தின் கொடையான ஏஐ பல்வேறு பரிணாமங்களை நோக்கி அசுர வேகத்தில் பயணிக்கிறது.

தற்போது தமிழகத்தில் ஆசிரியர் வடிவத்திலும் களம் கண்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் ரோபோ ஆசிரியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோ முன் மாணவர்கள் வரிசையாக நின்று, பல்வேறு பாடங்கள் தொடர்பான கேள்விகளை எழுப்புகின்றனர்.

இந்த கேள்விகளுக்கு ஏஐ ரோபோ சளைக்காமல் பதில் அளிக்கிறது. மேலும், மாணவர்களுக்கு பாட திட்டங்களை கற்பிப்பதுடன், அவர்களுடன் கைகொடுத்து இயல்பாக உரையாடுவதும் குறிப்பிடத்தக்கது. இதனை மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு உரையாடி மகிழ்கின்றனர். ரோபோவின் கீழ் பகுதியில் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளதால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக நகர்ந்து செல்கிறது.

பள்ளி தரப்பில் கேட்டபோது, ‘‘மனித உருவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஏஐ ஆசிரியை மாணவர்கள் எழுப்பும் கேள்விகளை `சர்ச் என்ஜின்’ உதவியுடன் எதிர்கொண்டு பதில் அளிக்கிறது. இந்த ரோபோவால் 25 இந்திய மொழிகள் மற்றும் 25 சர்வதேச மொழிகளில் சரளமாக பேச முடியும்’’ என்றனர்.

The post 25 மொழிகளை சரளமாக பேசும்; ராமேஸ்வரம் பள்ளியில்ஏஐ ஆசிரியை அறிமுகம்: மாணவர்களுக்கு பதிலளித்து அசத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article