மீன்பிடி தடைகாலம் எதிரொலி; கடல் மீன்கள் விலை கடும் உயர்வு: வஞ்சிரம் ரூ.1200க்கு விற்பனை

1 week ago 6


திருப்பத்தூர்: மீன்படி தடைகாலம் எதிரொலியாக கடல் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ரூ.800 விற்கப்பட்டு வந்து வஞ்சிரம் மீன் ரூ.1200 வரை விற்கப்படுகிறது. திருப்பத்தூர் பெரிய குளம் மேடு பகுதியில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு சென்னை, விசாகப்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கடல் மீன்கள் நாள்தோறும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் மீன்கள் தரம் வாரியாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர். தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளது. இதன் காரணமாக கடல் மீன்கள் விலை உச்சத்தில் உள்ளது.

ரூ.800 விற்கப்பட்டு வந்த வஞ்சிரம் மீன்கள் தற்போது ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், ரூ.200க்கும் விற்கப்பட்டு வந்த சங்கரா மீன்கள் தற்போது ரூ.500 வரை விற்கப்பட்டு வருகிறது. மேலும், அயில மீன்கள் ரூ.350க்கும், இறால் ரூ.500க்கும் விற்கப்பட்டு வருகிறது. இதேபோல் பல்வேறு வகையான கடல் மீன்கள் விலை ரூ.300க்கு மேல் தான் உள்ளது. அதேபோல் நண்டுகள் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று திருப்பத்தூர் மீன் மார்க்கெட்டில் பலவகையான மீன்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தன. ஆனால் விலையை கேட்டதும் அங்கு திரண்டிருந்த அசைவ பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனாலும் வேறு வழியின்றி மீன்களை வாங்கி சென்றனர். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் இருந்து பிடிக்கப்படும் ஜிலேபி, கெண்டை, ரோகு, பாப்புலேட் ஆகிய மீன்களின் விலை குறைவாகவே இருந்தது. கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post மீன்பிடி தடைகாலம் எதிரொலி; கடல் மீன்கள் விலை கடும் உயர்வு: வஞ்சிரம் ரூ.1200க்கு விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article