மீண்டும் வெற்றிப்படம் கொடுத்த உன்னி முகுந்தன்!

2 hours ago 1

நடிகர் உன்னி முகுந்தன் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், இவர் நடிப்பில் வெளியான 'மாளிகப்புர'ம் திரைப்படமும் கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான சீடன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'மார்கோ'. மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது.

உன்னி முகுந்தன், நிகிலா விமல் நடித்துள்ள 'கெட் செட் பேபி' படம் கடந்த 21-ந் தேதி வெளியானது.

இந்த நிலையில், இயக்குநர் வினய் கோவிந்த் இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான 'கெட் செட் பேபி' திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் செயற்கை கருத்தரித்தல் மருத்துவராக உன்னி முகுந்தன் நடித்திருக்கிறார். குழந்தைகள் குறித்த நெகிழ்ச்சியான காட்சிகளுடன் படம் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

#GetSetBaby Press Meet!! In theatres near you!! Watch with your loved ones!! pic.twitter.com/r3eYiWtE6v

— Unni Mukundan (@Iamunnimukundan) February 25, 2025
Read Entire Article