
சென்னை,
தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் நாளை (26-02-2025) காலை 7.45 மணிக்கு நடக்கிறது. விழுப்புரத்தில் நடந்த கட்சியின் முதல் மாநாட்டுக்கு பிறகு விஜய் பங்கேற்கும் கூட்டம் என்பதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக தேர்தல் வியூக நிபுணரும் ஜன்சுராஜ் கட்சியின் தலைவருமான பிரஷாந்த் கிஷோர் இன்று (பிப்ரவரி 25) சென்னை வந்தடைந்தார்.
பிரசாந்த் கிஷோர், தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, விஜய்யின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் வாக்காளர்களை எப்படி சந்திக்க வேண்டும், எதை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிகிறது.