மீண்டும் பாலிவுட்டில்...ரசிகர்களை கவர்ந்திழுக்க தயாரான பிரபல நடிகை

2 weeks ago 4

மும்பை,

பஞ்சாபி சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நீரு பஜ்வா, மீண்டும் பாலிவுட்டில் நடிக்க உள்ளார்.

ஜாட் & ஜூலியட், லாங் லாச்சி மற்றும் சர்தார் ஜி போன்ற பஞ்சாபி வெற்றிப் படங்களில் நடித்து பாராட்டப்பட்ட நீரு பஜ்வா, பாலிவுட் சினிமா பார்வையாளர்களை மீண்டும் ஒருமுறை கவர்ந்திழுக்க தயாராகி உள்ளார்.

அதன்படி, தற்போது உருவாகி வரும் அதிரடி-நகைச்சுவை படமான ''சன் ஆப் சர்தார் 2'' படத்தில் அஜய் தேவ்கனுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் அவர் அஜய் தேவ்கனின் மனைவியாக நடிக்க உள்ளதாக தெரிகிறது.

விஜய் குமார் அரோரா இயக்கியுள்ள இந்தப் படம், 2012 ஆம் ஆண்டு வெளியான அதிரடி-நகைச்சுவை படமான ''சன் ஆப் சர்தார்'' படத்தின் தொடர்ச்சியாகும். இப்படத்தில் ஏற்கனவே மிருணாள் தாகூர் இணைந்து நடித்து வருகிறார். இந்தப் படம் ஜூலை 25 அன்று வெளியாகிறது.

Read Entire Article