மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎப் வாசன்

6 months ago 15

சென்னை,

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன். இவர் பைக்கை வேகமாக ஓட்டி பல்வேறு சர்ச்சைகளிலும் அடிக்கடி சிக்குவார். தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அதன்படி, இவர் சமீபத்தில் கையில் பாம்பை வைத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டிருந்தார்.

அந்த பாம்பை லைசன்ஸ் பெற்று வளர்த்து வருவதாக தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், லைசன்ஸ் பெற்றிருந்தாலும் பாம்பை துன்புறுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டது சட்டப்படி குற்றம் என வனத்துறையினர் விளக்கம் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக டிடிஎப் வாசனிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article