மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.... இன்றைய நிலவரம் என்ன?

1 week ago 2

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இம்மாதத்தின் தொடக்கத்திலும் விலை அதிகரித்து இருந்தது. கடந்த 3-ந்தேதி ஒரு பவுன் ரூ.68 ஆயிரத்து 480 என்ற இதுவரை இல்லாத உச்சத்தை தங்கம் பதிவு செய்தது. மேலும் விலை அதிகரிக்கக் கூடும் என பேசப்பட்ட நிலையில், கடந்த 4-ந்தேதியில் இருந்து என்ன வேகத்தில் ஏற்றம் கண்டதோ, அதே வேகத்தில் சரியத் தொடங்கியதை பார்க்க முடிந்தது.

இந்த விலை குறைவு ஓரளவுக்கு மக்களுக்கு ஆறுதல் கொடுத்தது. ஆனால் அது நீடிக்கவில்லை. நேற்று ஒரே நாளில் மட்டும் காலை மற்றும் பிற்பகல் என 2 முறை தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அந்தவகையில் காலை கிராமுக்கு ரூ.65-ம், பவுனுக்கு ரூ.520-ம் உயர்ந்திருந்தது. அதேபோல், பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.120-ம், பவுனுக்கு ரூ.960-ம் அதிகரித்து இருந்தது. அதன்படி, ஒரே நாளில் கிராமுக்கு ரூ.185-ம், பவுனுக்கு ரூ.1,480-ம் உயர்ந்து, ஒரு பவுன் ரூ.67 ஆயிரத்து 280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 1200 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 150 உயர்ந்து ரூ. 8,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த பரஸ்பர வரி எதிரொலியால், பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். இதனால் அதன் விலை உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளி விலையை பொறுத்தவரையில், இன்று ரூ. 3 உயர்ந்து. , ஒரு கிராம் வெள்ளி ரூ.107-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read Entire Article