சென்னை,
பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் நடிகர்கள் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1000 கோடி வசூலை எட்டிய இந்தப் படத்தில் அனிருத்தின் இசையும் அதிகம் பேசப்பட்டது. 'சலேயா' உள்ளிட்டப் பாடல்களும் இணையத்தில் டிரெண்டானது. அதனுடன் இந்த படத்தின் பாடல்களுக்கு பல விருதுகளும் தொடர்ந்து வழங்கப்பட்டது. குறிப்பாக வட இந்திய ரசிகர்கள் இந்த படத்தின் இசை மற்றும் பிஜிஎம்ஐ சிறப்பாக கொண்டாடினர்.
இந்த படத்தின் வெற்றிருக்கு காரணமான அனிருத்தை சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஷாருக்கான் அவரை பாராட்டி வருகிறார். தனது அடுத்த படத்திற்கும் அனிருத் இசையமைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளார் ஷாருக்கான்.
அடுத்ததாக ஷாருக்கான் இயக்குனர் சுஜாய் கோஷ் இயக்கத்தில் 'கிங்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் ஷாருக்கான் மகள் சுஹான் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் அபிஷேக் பச்சன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 'கிங்' திரைப்படம் ஆக்சன் திரில்லர் கதைக்களமாக உருவாக இருக்கிறது. இசைக்கான முக்கியத்துவம் இதில் அதிகம் இருக்கும். இதை மனதில் கொண்டே, அனிருத்தை இந்தப் படத்திற்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் ஷாருக்கான் டானாக சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.