
டமாஸ்கஸ்,
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அதிபர் பாஷர் அல்-அசாத் தலைமையிலான அரசுக்கும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கலவரம் நீடித்து வருகிறது. 2011-ம் ஆண்டு தொடங்கி சுமார் 14 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இந்த கலவரத்தில் பாஷர் அல்-அசாத் கடந்த ஆண்டு நாட்டில் இருந்து வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதனால் உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிற்குள் தலைநகரமான டமாஸ்கஸ் உள்ளிட்ட நாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் வந்து விட்டன. இந்தநிலையில் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு மந்திரி டேவிட் லாமி அரசு முறை பயணமாக சிரியாவுக்கு செல்ல உள்ளார். அங்கு சென்று இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா நாடுகளுடன் சிரியாவின் ராஜாங்க உறவு, மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து புதிய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கி இதுவரை இங்கிலாந்து உள்பட பிற நாட்டை சேர்ந்த மத்திய மந்திரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் சிரியாவுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.