மீண்டும் இணைகிறதா பில்லா கூட்டணி? - இயக்குனர் விஷ்ணுவர்தன் அளித்த பதில்

7 hours ago 1

சென்னை,

நடிகர் அஜித் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் 'விடாமுயற்சி'. இதனையடுத்து, அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படங்களுக்கு பின்னர் அஜித் யாருடன் இணைவார் என்பதை அறிய அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

அதன்படி, சமீபகாலமாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இந்த நிலையில் அத்தகவல் குறித்து விஷ்ணு வர்தன் பேசியுள்ளார். சென்னை ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விஷ்ணுவர்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களை

"மீண்டும் திரையில் அஜித்-விஷ்ணுவர்தன் காம்போ"..விஷ்ணுவர்தன் சொன்ன பதில் | Ajithkumar#ajithkumar #ThanthiTV pic.twitter.com/lbDvIkwN1F

— Thanthi TV (@ThanthiTV) February 10, 2025

சந்தித்த அவர் அஜித்துடன் மீண்டும் இணைவது குறித்து பேசுகையில், "பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. உறுதியானவுடன் அறிவிப்போம்" என்றார்.

அஜித் - விஷ்ணுவர்தன் கூட்டணியில் பில்லா, ஆரம்பம் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இதையடுத்து தற்போது நடந்து வரும் பேச்சு வார்த்தை உறுதியானால் மூன்றாவது முறையாக இருவரும் இணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article