மீண்டும் 2-ம் பாகத்தை இயக்கும் பிரபல இயக்குனர்?

23 hours ago 2

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பூரி ஜெகன்னாத். இவர் கடைசியாக தனது பிளாக்பஸ்டர் படமான ஐஸ்மார்ட் ஷங்கரின் 2-ம் பாகமான 'டபுள் ஐஸ்மார்ட் ' படத்தை இயக்கி இருந்தார்.

ராம் பொதினேனி நடித்த இப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இயக்குனர் பூரி ஜெகநாத் மீண்டும் தனது பிளாக்பஸ்டர் படம் ஒன்றின் 2-ம் பாகத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, அதிரடி கிரைம் படமான கோலிமாரின் 2-ம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கோபிசந்த் நடிப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கோலிமார் படத்தை தயாரித்த பெல்லம்கொண்டா சுரேஷ் இதனையும் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


Read Entire Article