தற்போதைய நிலையில் எனது நோக்கம் இதுதான் - ஆஸி.கேப்டன் கம்மின்ஸ்

11 hours ago 1

சிட்னி,

ஆஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் அண்மையில் முடிவடைந்த இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் (5-வது போட்டி) காயமடைந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு வரும் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் களமிறங்கவில்லை. அது ஆஸ்திரேலிய அணிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது. ஏனெனில் கேப்டனாக ஒருநாள் உலகக்கோப்பையை வென்று கொடுத்த அவர் இல்லாமல் ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது. அவர் இல்லாத சூழலில் ஸ்டீவ் சுமித் கேப்டனாக செயல்படுகிறார்.

இந்த நிலையில் மார்ச் 22-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். தொடரில் களமிறங்க உள்ளதாக கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "தற்போதைய நிலையில் ஐ.பி.எல். போட்டியின் மூலம் களம் திரும்புவதே எனது நோக்கமாகும். அடுத்த வாரத்தில் இருந்து பந்து வீச்சு பயிற்சியை தொடங்க உள்ளேன். ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக நல்ல நிலையை எட்ட முடியும் என்று நம்புகிறேன். ஐ.பி.எல். தொடரில் பந்து வீசுவது அடுத்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு நன்றாக தயாராக உதவிகரமாக இருக்கும்' என்று கூறினார். 

Read Entire Article