நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும்.. - விராட் கோலியை எச்சரித்த இந்திய முன்னாள் வீரர்

11 hours ago 1

மும்பை,

8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளன. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.

சமீப காலங்களாக பார்மின்றி தவித்து வந்த நட்சத்திர வீரரான விராட் கோலி இந்த தொடரிலாவது மீண்டும் பார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் 38 பந்துகளை எதிர்கொண்ட அவர் 22 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் எதிர்வரும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் மீண்டும் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்நிலையில் தற்போதைய சூழலில் விராட் கோலி எவ்வாறு விளையாட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் அவருக்கு அறிவுரை மற்றும் எச்சரிக்கை ஆகியவற்றை வழங்கி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் எவ்வளவு சாதனையை செய்திருந்தாலும் ஒவ்வொரு போட்டியிலும் ரன் குவிப்பதை விடாமல் செய்ய வேண்டும். ஏனெனில் உங்களது ஆட்டத்தை ரசிக்க ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதேபோன்று நீங்கள் ரன் அடிக்கும்போது அவர்கள் கொண்டாடுவார்கள். ஆனால் தற்போது நீங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக உணர்கிறேன். இதிலிருந்து சில யுத்திகளை மாற்றிக்கொண்டு மீண்டும் மிகச்சிறப்பாக ரன் குவிக்க முயல வேண்டும்.

ஒருவேளை நீங்கள் பார்மில் இல்லை என்றால் அதிக நேரம் களத்தில் இருந்து பந்துகளை சந்தித்து ரன் சேர்க்க வேண்டும். ஆனால் அதிக நேரம் செலவிடும்போது அழுத்தத்தை உணர்ந்தால் நிச்சயம் அது உங்களை ஆட்டமிழக்க வைக்கும். எனவே நீங்கள் புதிய முயற்சிகளை எடுத்தாக வேண்டும் நிச்சயம் நீங்கள் ஒரு சாம்பியன் வீரர்தான்.

எனவே இதிலிருந்து வெளிவர வேண்டிய அனைத்து வழிகளும் உங்களுக்கு தெரியும். மனதில் தேவையில்லாத சிந்தனைகளை நீக்கிவிட்டு சுதந்திரமாக இயல்பாக உங்களது ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் நிச்சயம் உங்களால் பிரகாசிக்க முடியும். இல்லையெனில் நீங்கள் அழுத்தத்தில் சிக்க வேண்டிய நிலையும் சந்திக்க நேரிடும்" என்று கூறினார்.

Read Entire Article