
இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
இந்நிலையில் மாணவர் சேர்க்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக, 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏற்கனவே தொடங்கி இருந்தாலும், இன்று முதல் மாணவர் சேர்க்கை பணிகளை தீவிரமாக மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இருந்தது.