மிருகண்டா நதி அணையில் இருந்து 6 நாட்கள் தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

12 hours ago 4

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், மிருகண்டா நதி அணையில் இருந்து பாசனத்திற்காக 17 ஏரிகளின் குறைந்துள்ள தண்ணீரின் கொள்ளளவை நிரப்பும் பொருட்டு 03.05.2025 நண்பகல் 12.00 மணி முதல் வினாடிக்கு 120.00கன அடி வீதம் 09.05.2025 வரை 6 நாட்கள் 62.208 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் மூலம் மிருகண்டாநதி நீர்த்தேக்கத்தின் கீழ் உள்ள (1) காந்தபாளையம் அணைக்கட்டு, (2) நல்லான்பிள்ளைபெற்றாள் அணைக்கட்டு, (3) கங்காலமாதேவி அணைக்கட்டு, (4) கேட்டவரம்பாளையம் அணைக்கட்டு, (5) கங்காலமாதேவி அணைக்கட்டு, (6) சிறுவள்ளூர் அணைக்கட்டு, (7) பிள்ளையார் கோவில் அணைக்கட்டு, (8) சிறுவள்ளூர் காலனி அணைக்கட்டு, (9) வில்வாரணி அணைக்கட்டு, (10) அம்மாபுரம் அணைக்கட்டு மற்றும் (11) எலத்தூர் அணைக்கட்டின் கீழ் பயன்பெறும் நேரடி பாசனம் மற்றும் 17 ஏரிகளின் வாயிலாக மொத்தம் 2847.49 ஏக்கர் ஆயக்கட்டு நிலம் பாசனவசதி பெறும்.

மேலும் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், செண்பகதோப்பு நீர்த்தேக்கத்திலிருந்து 48 ஏரிகளில் குறைந்துள்ள தண்ணீரின் கொள்ளளவை நிரப்பும் பொருட்டு 03.05.2025 காலை 9.00 மணி முதல் வினாடிக்கு 150.00 கன அடி வீதம் 18.05.2025 அன்று காலை 9.00 மணி வரை 15 நாட்களுக்கு 8350.40 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் 194.40 மில்லியன் கன அடி தண்ணீர் ஒரே தவணையாக திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் மூலம் செண்பகத்தோப்பு நீர்த்தேக்கத்தின் கீழ் உள்ள ஐந்து அணைக்கட்டுகளின் மூலம் 48 ஏரிகளின் வாயிலாக மொத்தம் 8350.40 ஏக்கர் ஆயக்கட்டு நிலம் பாசனவசதி பெறும்.

The post மிருகண்டா நதி அணையில் இருந்து 6 நாட்கள் தண்ணீர் திறந்து விட அரசு ஆணை appeared first on Dinakaran.

Read Entire Article