
புளோரிடா,
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜோகோவிச் (செர்பியா), அர்ஜெண்டினாவின் கமிலோ யூகோ காரபெல்லி உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-1, 7-6 (6-1) என்ற செட் கணக்கில் கமிலோ யூகோ காரபெல்லியை வீழ்த்தி 4வது சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார்.
நாளை நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச், இத்தாலியின் லோரென்சோ முசெட்டி உடன் மோத உள்ளார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.