பாங்காக்: மியான்மரில் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை இந்த விழா கொண்டாடப்படும். இந்நிலையில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3725 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்துள்ளது. எனினும் புத்தாண்டையொட்டி சிறையில் இருந்த 4893 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட கைதிகளில் வெளிநாட்டை சேர்ந்த 13 பேரும் அடங்குவார்கள்.
விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் சட்டத்தை மீறினால் அவர்களின் விடுதலையின் விதிமுறையின்படி புதிய தண்டனை மற்றும் ஏற்கனவே மீதமுள்ள தண்டனையையும் சேர்த்து அனுபவிக்க வேண்டி இருக்கும்.
The post மியான்மர் புத்தாண்டையொட்டி சிறையில் இருந்து 4893 கைதிகள் விடுதலை appeared first on Dinakaran.