மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் - ரிக்டர் 5.1 ஆக பதிவு

2 days ago 4

நேபிடா,

மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவான நிலையில், நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் மியான்மரில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், சுமார் 2 ஆயிரம் பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மியான்மரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. மியான்மர் தலைநகர் நேபிடா அருகே, மதியம் 2.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று மட்டும் 7 முறை மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Read Entire Article