அவுரங்கசீப்பை பெருமைப்படுத்துவதை சகித்துக் கொள்ள மாட்டோம்- தேவேந்திர பட்னாவிஸ்

1 day ago 3

மும்பை,

மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நாக்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்றவேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறுகையில் "நாம் அவுரங்கசீப்பை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவரது கல்லறை ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் தான். ஆனால் அவரை யாரும் பெருமைப்படுத்தி பேசுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இருப்பினும் அங்கு சட்டத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட கட்டமைப்புகள் இடித்து அகற்றப்பட வேண்டும்" என்றார்.

வங்கிகளில் மராத்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என நவநிர்மாண் சேனா வலியுறுத்தி இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "தேவையான இடங்களில் மராத்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதில் எந்த தவறும் இல்லை. இருப்பினும் அதற்காக யாரும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள கூடாது" என்றார்.

Read Entire Article