மியான்மரில் 3வது நாளாக மீண்டும் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

1 month ago 7

நேபிடாவ்,

மியான்மரில் இன்று மதியம் 12.38 மணி அளவில் மீண்டும் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்ச்சியான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். மியான்மரில் மீண்டும் 3வது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து மண்டலேயின் தெருக்களில் இருந்த மக்கள் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலறினர். முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.

மியான்மரில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதுவரை, 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும். 3,400 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 5 இராணுவ விமானங்களில் நிவாரணப் பொருட்கள், மீட்புக் குழுக்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மியான்மருக்கு அனுப்பி வைத்துள்ளது. நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மரில் இந்திய என்.டி.ஆர்.எப் குழு களமிறங்கி உள்ளது.

Read Entire Article