மின்சார ரெயில்கள் 14-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என அறிவிப்பு

1 week ago 2

சென்னை,

சென்னை, புறநகர் பகுதிகளில் தினமும் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் வழக்கமாக 40 சதவீத ரயில்கள் குறைத்து இயக்கப்படும். அந்த வகையில், தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர். அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 14ம் தேதி, தேசிய விடுமுறை என்பதால், ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர். அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை சென்டிரல்-அரக்கோணம், சென்னை சென்டிரல்- சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையேயான வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article