படகில் பயங்கர தீ விபத்து; 143 பேர் பலி

8 hours ago 2

கின்ஷனா,

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. போதிய சாலைவசதியின்மை காரணமாக இந்நாட்டில் போக்குவரத்திற்கு மக்கள் அதிக அளவில் ஆறுகளை பயன்படுத்துகின்றனர். இந்த பயணங்களின்போது விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் ஈக்வடூர் மாகாணத்தில் இருந்து அருகே உள்ள மாகாணத்திற்கு ருகி ஆற்றில் படகு சென்றுகொண்டிருந்தது. மரத்தால் ஆன அந்த படகில் 150க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். மேலும், எரிபொருளும் அந்த படகில் கொண்டு செல்லப்பட்டது.

பண்டமா என்ற பகுதியில் சென்றபோது படகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எரிபொருள் வைத்திருந்த பகுதியிலும் தீ மளமளவென பரவியது. இதனால் மரத்தால் ஆன படகு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இந்த சம்பவத்தில் படகில் பயணித்த 143 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆற்றில் குதித்த பலர் மாயமாகினர். இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நடைபெற்றுள்ளது. போதிய தகவல் தொடர்பு வசதியின்மை போன்ற காரணங்களால் இந்த விபத்து குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ஆற்றில் குதித்து மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.  

Read Entire Article