தாம்பரம்: சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே நான்காம் வழித்தடம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று காலை 5.10 மணிமுதல் மாலை 4.10 மணிவரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. அதேபோல செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள், தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்பட்டன.
பயணிகள் வசதிக்காக தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. ரயில்கள் ரத்தால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேருந்தில் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் திரண்டதால் தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.