மின்சார ரயிலில் திடீர் புகை: பயணிகள் அலறல்

1 day ago 4

சென்னை: மின்சார ரயிலில் திடீர் புகை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் நேற்று மாலை 5 மணியளவில் சென்று கொண்டிருந்தது. குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்தபோது ரயில் இன்ஜினில் இருந்து திடீரென புகை வந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. உடனே ரயிலில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு இறங்கினர்.

அதன் பின்னர் ரயில்வே ஊழியர்கள் புகைவந்த இன்ஜின் பெட்டியை சோதனையிட்டனர். மின்சார உராய்வு காரணமாக புகை வந்தது தெரியவந்தது. அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரயிலில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்த பிறகு அரை மணி நேரம் தாமதமாக மின்சார ரயில் குரோம்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. இதன் காரணமாக தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு மின்சார ரயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

The post மின்சார ரயிலில் திடீர் புகை: பயணிகள் அலறல் appeared first on Dinakaran.

Read Entire Article