சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நாளை அறிவிக்கப்பட்ட போரட்டத்திற்கு அனுமதி அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிக்கக்கோரி கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சி.பாலசந்தர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. போரட்டம் நடத்துவது தொடர்பாக சம்மந்தபட்ட மாவட்டங்களில் உள்ள காவல் அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை என காவல்துறை பதிலளித்துள்ளது.
The post மின் உற்பத்தி, பகிர்மான ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நாளை அறிவிக்கப்பட்ட போரட்டத்திற்கு அனுமதி அளிக்க ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.