மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது..

2 months ago 11
சேலம் காமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர், தனது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கக்கோரி, சூரமங்கலம் மல்லமூப்பம்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அவரிடம் மின் இணைப்பு வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என மின்வாரிய வணிக ஆய்வாளர் மணி என்பவர் கூறியுள்ளார். இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசில் மணிவண்ணன் புகார் அளித்தார். இதையடுத்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மணிவண்ணன் வழங்கியபோது, அங்கு மஃப்டியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், வணிக ஆய்வாளர் மணியையும், சிறப்பு நிலை முகவர் ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். 
Read Entire Article