விருதுநகர், ஏப்.4: மின்வாரிய அலுவலகங்களில் நாளை சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மாலதி தகவல்: மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து மின்கட்டணத்தொகை வேறுபாடு, மின் மீட்டர்கள் மாற்ற வேண்டியது, சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றுவது, குறைந்த மின் அழுத்தம் சரி செய்தல் உள்ளிட்ட புகார்கள் இருந்தால் அவற்றை சரி செய்ய நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை கோட்டத்தில் திருச்சுழி ரோடு அருப்புக்கோட்டை செயற்பொறியாளர் அலுவலகத்திலும், விருதுநகர் கோட்டத்திற்கு விருதுநகர் ராமமூர்த்தி ரோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், சிவகாசி கோட்டத்தில் சிவகாசி கார்நேசன் ரோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி செயற்பொறியாளர் அலுவலகம், ராஜபாளையம் கோட்டம் சத்திரப்பட்டி ரோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post மின் அலுவலகங்களில் நாளை சிறப்பு முகாம் appeared first on Dinakaran.