மாலி நாட்டில் தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு - 48 பேர் உயிரிழப்பு

1 week ago 5

பமாகோ,

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், ஏராளமான தங்க சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. இதனிடையே அங்கு சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சில சுரங்கங்களில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், மேற்கு மாலியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்க சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

சுரங்கத்தில் 1,800 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், 48 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாக கெனீபா தங்க சுரங்க தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்கள் பலரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தங்க சுரங்கத்தில் ஒரு சுரங்கப்பாதை இடிந்து விழுந்து 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article