டெல்லி: மாலத்தீவு நாட்டுடன் இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் பிரதமர் மோடி கையெழுத்திட்டுள்ளார். அரசு முறை பயணமாக, இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று (அக்.,07) பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். முன்னதாக அவரை, ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு வரவேற்றனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில்,
*பருவநிலை மாற்றம் என்பது நமது இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
*பாதுகாப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து நாங்கள் விரிவாக விவாதித்தோம்.
*மாலத்தீவு, தேசிய பாதுகாப்புப் படைகளின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான எங்கள் ஒத்துழைப்பைத் தொடருவோம்.
*வரும் காலத்தில், இந்தியா மற்றும் மாலத்தீவுகள் UPI மூலம் இணைக்கப்படும்.
*டெல்லியில் மாலத்தீவு அதிபர் முய்ஜு முன்னிலையில் பிரதமர் மோடி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
*பொருளாதார உறவுகளை வலுப்படுத்த, வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதித்தோம்.
*மாலத்தீவு மக்களுக்கு உதவி செய்வதில், நாங்கள் எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறோம்.
*மாலத்தீவு உடன் ரூ.3,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா மற்றும் மாலத்தீவு உறவு பல நூற்றாண்டுகள் பழமையானது.
மாலத்தீவுடன் இந்தியாவுக்கு பாரம்பரிய உறவு: மோடி
நெடுங்காலமாக மாலத்தீவுடன் இந்தியா பாரம்பரிய உறவு கொண்டுள்ளது என பிரதமர் மோடி பேசி வருகிறார். மாலத்தீவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும். ஏற்றுமதி, இறக்குமதிக்கு இந்திய மதிப்பில் பணம் செலுத்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்தியா மாலத்தீவின் நெருங்கிய நட்பு நாடு
இந்தியா மாலத்தீவின் நெருங்கிய அண்டை நாடு மற்றும் நெருங்கிய நட்பு நாடு. நமது அண்டை நாட்டு கொள்கையில் மாலத்தீவு முக்கிய இடம் வகிக்கிறது. மாலத்தீவுக்கு பிரச்னை என்றால் முதலில் உதவி செய்வது இந்தியா தான். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
The post மாலத்தீவு நாட்டுடன் இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் பிரதமர் மோடி கையெழுத்து..!! appeared first on Dinakaran.