மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்

2 days ago 2

தர்மபுரி, ஜன.30: பாலக்கோடு வட்டார வளமையத்தில், பள்ளி கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான, இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது. முகாமை மாவட்ட உதவி திட்ட அலுவலர் மஞ்சுளா தொடங்கி வைத்தார். முகாமில் 0 முதல் 18வயதுடைய 86க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மருத்துவக் குழுவினரின் மருத்துவ பரிசோதனை அடிப்படையில், முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு 27அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், 7 மாணவர்களுக்கு உபகரணம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர்கள் தங்கவேல், அன்பு வளவன், சுப்பிரமணி, வட்டார மேற்பார்வையாளர் சுகுணா மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், வட்டார ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article