வாஷிங்டன்: அமெரிக்காவில் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்பாக ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டருடன் விமானம் மோதியது. இதில் தீப்பிடித்து வெடித்து சிதறிய விமானம், ஹெலிகாப்டர் நதியில் விழுந்தன. விமானத்தில் 64 பேரும் ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்கள் இருந்தனர். இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. நேற்று முன்தினம் மாலை வரை சுமார் 28 சடலங்கள் நதியில் இருந்து மீட்கப்பட்டது.
இதனிடையே விமான விபத்தில் உயிரிழந்த 67 பேரில் 2 பேர் இந்திய வம்சாவளியினர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் இருந்து குடியேறிய தம்பதியினரின் 26 வயது மகள் அஸ்ரா ஹூசைன் ரசாவும் ஒருவர். ஆலோசகரான ரசா மருத்துவமனையின் மறுசீரமைப்பு திட்டத்தில் பணியாற்றுவதற்காக மாதத்துக்கு இரண்டு முறை விசிட்டாவுக்கு சென்று வருவார் என்று அவரது கணவர் தெரிவித்துள்ளார். பலியான மற்றொரு இந்திய வம்சாவளி ஜிஇ நிறுவனத்தில் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியராக பணியாற்றி வந்த விகாஷ் படேல்.
The post அமெரிக்க விமான விபத்தில் இந்திய வம்சாவளி 2 பேர் பலி appeared first on Dinakaran.