சென்னை,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, மெரினா கடற்கரையை அடுத்து, பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் - மூத்த குடிமக்களுக்கான மரப்பாதைகளை அமைத்து வரும் நிலையில், அப்பணிகளை கடந்த ஞாயிறு அன்று நாம் ஆய்வு செய்தோம்.
மேலும், முதல்-அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், திருவான்மியூர் மற்றும் வேளாங்கண்ணி கடற்கரைகளிலும் மாற்றுத்திறனாளிகள் - மூத்த குடிமக்கள், எளிதில் கடல் அருகே செல்லும் வகையில் மரப்பாதைகள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்தோம்.இதற்காக, நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளி சகோதர - சகோதரிகள், இந்த மகிழ்ச்சியை நம்முடன் இணைந்து கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில், குறிஞ்சி முகாம் அலுவலகத்தில் 30 மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினோம். அவர்களுடன் சிற்றுண்டி அருந்தி மகிழ்ந்தோம். மேலும் 1000 மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான இனிப்பு வகைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினோம். மேலும், அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும். என தெரிவித்துள்ளார்