கரூர் மே 21: இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் 2007ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த வாரியம் அவ்வப்போது மறுசீரமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த வாரியம் அரசு அலுவலர் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை கொண்டுள்ளது. இந்த வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நியமிக்கப்படுவர். அதன்படி, தற்போது புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளதால் பார்வையற்றோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தவழும் மாற்றுத்திறனாளிகள், உயரம் குறைந்த மாற்றுத்திறனுடையோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், கை, கால் இயக்க குறைபாடு ஆகியோர்களுக்கான மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள் மற்றும் புற உலக சிந்தனையற்ற,
மதி இறுக்கமுடையோர், மூளை முடக்குவாதம், அமில வீச்சால் பாதிக்கப்பட்டோர், அறவுசார் குறைபாடு உடையோர், கற்றல் குறைபாடு உடையோர், மனநல பாதிப்பு, ரத்த சோகை பாதிப்பு மற்றும் பல்வகை குறைபாட்டால் மற்றும் அவர்களுக்கு சேவை புரியும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பிரதிநிதிகளை, இந்த வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வழியாக மாற்றுதிறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் சென்னை என்ற முகவரிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மே 23ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடைய வேண்டும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலம், மாவட்ட கலெக்டர் அலுவலக முகவரியை தொடர்பு கொண்டு (04324&257130) பயனடையுமாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது
The post மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.