தொடர்ந்து சரியும் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?

3 hours ago 1

சென்னை,

தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த 25ம் தேதி ஒரு சவரன் ரூ.64,600-க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்தோடு காணப்பட்டது.

இந்தசூழலில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.63,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று மேலும் குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ. 7,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ரூ.105 விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தாறுமாறாக அதிகரித்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருவதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read Entire Article