மார்ச் 3ல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு..! 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்

3 months ago 14

கோவை: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ல் தொடங்கி மார்ச் 25ல் முடிகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2024 – 2025ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன்படி பள்ளிக்கல்வித்துறை, அரசு தேர்வுகள் இயக்கம் நடத்தும் 2024-2025 கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வை மொத்தமாக 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி நிறைவு பெறுகிறது. அதேபோல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 05ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைகிறது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 15ம் தேதி முடிவடைகிறது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ( Practical Exam) 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 07ம் தேதி தொடங்கி 14ம் தேதி முடிவடைகிறது. இதேபோல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கும் செய்முறை தேர்வு பிப்ரவரி 21ம் தேதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பிப்ரவரி 22ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கி பிப்ரவரி 28ம் தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு முடிவகளை பொறுத்தவரை 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 09ம் தேதி வெளியாகும் என்றும், 11 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே-19ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மார்ச் 3ல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு..! 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.

Read Entire Article