மார்ச் 31ம் தேதி குடும்ப அட்டை கைரேகை பதிவு சிறப்பு முகாம்

4 months ago 16

 

திருவாரூர், பிப்.22: திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் பயனாளிகளின் குடும்ப அட்டையிலுள்ள அனைத்து உறுப்பினர்களின் கைரேகை பதிவுகளை பொதுவிநியோகத் தரவுத்தொகுப்பில் பதிவுசெய்திட இந்தியஅரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் வரும் 24ந் தேதியும், அடுத்த மாதம் (மார்ச்) 2, 9, 17 மற்றும் 24 தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

மேலும் இவ்வாறு முகாம் நடைபெறாத நாட்களில் நியாயவிலைக்கடை விற்பனையாளர் மூலம் தினசரி வீடுவீடாகசென்று சரிபார்ப்புக்கான பணிகள் நடைபெறவுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் அடுத்த மாதம் (மார்ச்) 31ந் தேதிக்குள் சரிபார்க்கப்பட்டு குடும்பஅட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கைரேகை பதிவுசெய்வது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், சிறப்பு முகாம் நடைபெறும் தேதிகளில் நியாயவிலைக்கடை விற்பனையாளர் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் குடும்பஅட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

 

The post மார்ச் 31ம் தேதி குடும்ப அட்டை கைரேகை பதிவு சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article