மார்ச் 31க்குள் வரி பாக்கியை செலுத்த தவறினால் குடிநீர் துண்டிக்கப்படும்

1 day ago 2

 

தஞ்சாவூர், மார்ச் 26: தஞ்சாவூர் மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 589 கிராம ஊராட்சிகளில் நிலுவை மற்றும் நடப்பாண்டு சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, தொழில் உரிமம் கட்டணம் மார்ச் 31-க்குள் செலுத்திட வேண்டும். எனவே, நிலுவை மற்றும் நடப்பாண்டிற்கான வரியினங்களை ஊராட்சி அலுவலகத்திலோ, வரிவசூல் முகாம்களிலோ, ஊராட்சி களப்பணியாளர்களிடமோ POS MACHINES மூலமாகவோ, வீட்டுவரி https://vptax.tnrd.gov.in/ ) VP Tax Online Portal மூலமாகவோ, பேட்டிஎம், ஜீபே, போன்பே போன்ற யூபிஐ மூலமாகவோ, பற்று அட்டை அல்லது கடன் அட்டை மூலம் வரி தொகை செலுத்தி இணையதள ரசீது பெற்று கொள்ளவேண்டும். மேலும், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994ன்படி முறையாக வரிசெலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை, குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் வீட்டுக் குடிநீர் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிற விவரம் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

The post மார்ச் 31க்குள் வரி பாக்கியை செலுத்த தவறினால் குடிநீர் துண்டிக்கப்படும் appeared first on Dinakaran.

Read Entire Article