கடந்த ஏப்ரல் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 4.4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில், நிறுவனங்கள் டீலர்களுக்கு விற்பனை செய்த மொத்த விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளன. அனைத்து நிறுவனங்களையும் சேர்த்து மொத்தம் 3.53 லட்சம் வாகனங்கள் டீலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ன முந்தைய ஆண்டு ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் இது 4.4 சதவீதம் உயர்வாகும்.
மாருதி சுசூகி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 1,38,704 வாகனங்களை டீலர்களுக்கு விற்பனை செய்துள்ளது. மந்தைய ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இது 1,37,952 ஆக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுபோல், மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் 52,330 வாகனங்களை விற்றுள்ளது. இது முந்தைய ஆண்டு ஏப்ரலில் 41,008 ஆக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 27.6 சதவீதம் அதிகரித்துள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன வாகன விற்பனை 24,833. முந்தைய ஆண்டு ஏப்ரலில் விற்பனை செய்யப்பட்ட 18,700 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் விற்பனை 32.8 சதவீதம் உயர்ந்துள்ளது. கியா மோட்டார்ஸ் விற்பனை கடந்த ஆண்டு ஏப்ரலில் 19,968 ஆக இருந்தது கடந்த ஏப்ரலில் 18.3 சதவீதம் அதிகரித்து 23,623 ஆக இருந்தது.
ஹூண்டாய், டாடா மோட்டார் வாகனங்களின் விற்பனை மட்டும் சரிவை சந்தித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஏப்ரலில் 44,374 வாகனங்களை விற்றுள்ளது. இது முந்தைய ஆண்டு விற்பனையான 50,201 வாகனங்களுடன் ஒப்பிடுஐகயில் 11.6 சதவீதம் சரிவாகும். இதுபோல், கடந்த மாதத்துக்கான வாகன விற்பனை நிலவரத்தை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த ஏப்ரல் மாதத்தில் 72,753 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதில் வணிக பயன்பாட்டு வாகனங்கள் 27,221, பயணிகள் வாகனங்கள் 45,532 அடங்கும். முந்தைய ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் வணிக பயன்பாட்டு வாகன விற்பனை 8 சதவீதமும், பயணிகள் வாகனங்கள் விற்பனை 5 சதவீதமும் சரிந்துள்ளது. உள்நாட்டில் 70,963 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இ 7 சதவீத சரிவாகும். பயணிகள் வாகனங்களில் அதிகபட்சமாக எஸ்சிவி கார்கோ மற்றும் பிக் அப் வாகனங்கள் விற்பனை 23 சதவீதம் சரிந்து 9,131 வாகனங்கள் விற்றுள்ளன. இதுபோல் இதற் கு அடுத்ததாக எச்சிவி டிரக்குகள் விற்பனை 8 சதவீதம் சரிந்து 7,270 ஆக உள்ளது.
The post கடந்த ஏப்ரல் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 4.4 சதவீதம் அதிகரிப்பு appeared first on Dinakaran.