சென்னை: தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் ரமலான் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி எழும்பூரில் உள்ள பைசல் மஹாலில் மார்ச் 24-ம் தேதி நடக்கிறது. இதற்காக, கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜக அழைப்பு விடுத்து வருகிறது.
அந்த வகையில், பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி தலைமையில், பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், சிறுபான்மை அணி மாநிலத் தலைவர் டெய்சி தங்கையா, மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு நேரில் அழைப்பு விடுத்தனர்.