சென்னை: இந்திய ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் ஒன்றினைந்திருக்கிறோம் என கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயகத்தை காக்க ஓரணியில் திரண்டுள்ளதை நாட்டுக்கே உணர்த்தி உள்ளோம். அனைத்து தரப்பு மக்களும் போராடியதால்தான் நமக்கு விடுதலை கிடைத்தது. கூட்டாட்சி தன்மைக்கு சோதனை வந்தபோதெல்லாம் ஜனநாய அமைப்புகள் பாதுகாத்திருக்கின்றன. கூட்டாட்சி தன்மைக்கு சோதனை வந்தபோதெல்லாம் ஜனநாய அமைப்புகள் பாதுகாத்திருக்கின்றன. வரலாற்றில் இந்திய கூட்டாட்சியை காக்கும் மிக மிக முக்கிய நாளாக இன்றைய நாள் அமைய உள்ளது. தொகுதி மறுசீரமைப்பால் நாடாளுமன்றத்தில் நமது பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும். மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி வரையறையால் நமது மாநில தொகுதிகள் குறையும். மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிப்பதாக தொகுதி மறுசீரமைப்பு உள்ளது என்று கூறினார்.
The post தொகுதி மறுசீரமைப்பால் நாடாளுமன்றத்தில் நமது பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.