மார்ச் 10ம் தேதி வரை ஞானசேகரனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஆலந்தூர் மாஜிஸ்திரேட் உத்தரவு!

3 hours ago 1

சென்னை: ஞானசேகரனை மார்ச் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஆலந்தூர் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். திருட்டு வழக்குகளில் மூன்று நாட்கள் போலீஸ் காவல் முடிந்து ஆஜர்படுத்தப்பட்ட ஞானசேகரனை மீண்டும் சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஞானசேகரன் திருட்டு வழக்குகளில் மூன்று நாட்கள் போலீஸ் காவல் முடிந்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், 7 திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2022ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள வில்லா டைப் வீடுகளை குறிவைத்து காரில் வந்து கொள்ளையடித்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். முதற்கட்டமாக பள்ளிக்கரணை பகுதியில் 7 வீடுகளில் கைவரிசை காட்டியதை ஞானசேகரன் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், ஞானசேகரன் திருட்டு வழக்குகளில் மூன்று நாட்கள் போலீஸ் காவல் முடிந்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மார்ச் 10ம் தேதி வரை ஞானசேகரனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஆலந்தூர் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். திருட்டு வழக்குகளில் மூன்று நாட்கள் போலீஸ் காவல் முடிந்து ஆஜர்படுத்தப்பட்ட ஞானசேகரனை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

The post மார்ச் 10ம் தேதி வரை ஞானசேகரனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஆலந்தூர் மாஜிஸ்திரேட் உத்தரவு! appeared first on Dinakaran.

Read Entire Article