திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடை பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். சிபிஎம் தொண்டரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு இரவில் வீட்டில் இருந்த அசோகனை ஒரு கும்பல் வெளியே இழுத்துப் போட்டு சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக காட்டாக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த சம்பு, ஸ்ரீஜித், ஹரிகுமார், சந்திரமோகன், சந்தோஷ், அபிஷேக் பிரசாத் மற்றும் சஜீவ் ஆகிய 8 பேரை கைது செய்தது. இந்த வழக்கு திருவனந்தபுரம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. முதல் 5 குற்றவாளிகளான சம்பு, ஸ்ரீஜித், ஹரிகுமார், சந்திரமோகன் மற்றும் சந்தோஷ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், அபிஷேக், பிரசாத் சஜீவ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
The post மார்க்சிஸ்ட் தொண்டரை வெட்டிக் கொலை செய்த வழக்கு 5 ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.