
மதுரை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) தேசிய மாநாட்டில், கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் இதனை அறிவித்தார்.
இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்-க்குப் பிறகு கேரளாவில் இருந்து அகில இந்திய பொதுச் செயலாளர் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.