மாருதி சுசூகி நிறுவனம், ஜிம்னி என்ற எஸ்யுவியை 2023 ஜூன் 7ம் தேதி அறிமுகம் செய்தது. 5 கதவுகள் கொண்ட இந்த எஸ்யுவியில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 105 எச்பி பவரையும், 134 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க்யூ கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. அறிமுகம் செய்ததில் இருந்து 1 லட்சம் கார்கள் விற்பனை என்ற இலக்கை தாண்டி விட்டது. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, 1,02,024 மாருதி ஜிம்னி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் உள்நாட்டில் 26,180 கார்கள் விற்பனையாகியுள்ளன. வெளிநாடுகளுக்கு 75,844 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் இதுவரை உள்நாட்டில் 431 ஜிம்னி கார்கள் விற்பனையாகியுள்ளன. 5,671 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஏற்றுமதியில் 74 சதவீதம் ஜப்பான் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
The post மாருதி சுசூகி எஸ்யுவி appeared first on Dinakaran.